புதிய பார்வை அணி 2021 சட்டமன்ற தேர்தல் நகர்வு

மாற்றத்தை நோக்கி ..!

எங்களைப்பற்றி

தமிழகத்தின் மீதும் தமிழக மக்களின் மீதும் உண்மையான பற்று கொண்டு பல வருடங்களாக மக்களுடன் மக்களுக்கான செயல்பாடுகளில் தம்மை உண்மையாக ஈடுபடுத்தி கொண்டு செயல்பட்டு வரும் கட்சிகள் நாங்கள். ஆரம்பிக்கப்பட்ட சூழல் வெவ்வேறு இருக்கலாம் ஆனால் சந்திக்க கூடிய களம் என்பது ஒன்று தான் என்பதனை புரிந்து கொண்டு தமிழக மக்களிற்கு நேர்மையான மக்கள் விரும்பும் நல்லாட்சியை மக்களாட்சியை வழங்க தனித்தனியாக செயல்பட்டு வந்த நாங்கள் ஒன்றிணைந்து புதிய பார்வை கூட்டணி துவங்கியுள்ளோம்.

இலக்கு

அதிகாரம் மிகவும் வலிமையானது அதை அடைந்தால் எல்லாம் எளிமையானது என்பதை உணர்ந்து வர இருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் புதிய பார்வை கூட்டணியின் சார்பாக 234 தொகுதியிலும் போட்டியிட்டு மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல செயல் என்பதை உண்மை ஆக்குவதே இலக்கு.

செயல் திட்டங்கள்

தமிழகத்திலும் இந்தியாவிலும் நேர்மையான ஊழற்ற நல்லாட்சி நடைபெறவேண்டும் என்பதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தளங்களில் போராடி தங்கள் பங்களிப்பை அளித்த தேசிய மக்கள் சக்தி கட்சி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இளந்தமிழர் முன்னணி கழகம், காந்தீய சம்தர்ம இயக்கம் ஆகிய கட்சிகளும் பிற தன்னார்வ நிறுவனங்களும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து கூட்டணியை ஏற்படுத்தி 25 தொகுதிகளில் போட்டியிட்டது.

10+

அணியின் கட்சிகள்

30

2019 வேட்பாளர்கள்

10

களப்பணி அனுபவம்

100

மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள்